ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில், நக்கீரன் கோபால் மனு செய்துள்ளார்.

நீதிபதி ராஜேந்திரன் முன் கோபாலின் ஜாமீன் மனுவை அவரது வக்கீல் இளங்கோ தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 1991ம் ஆண்டு முதல் தமிழக போலீஸார் என் மீது கோபத்தில் உள்ளனர். 1991ம் ஆண்டு முதல்96ம் ஆண்டு வரை என் மீதும், எனது பத்திக்கை மீதும் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைஅனைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகள்.

இந்த வழக்குகளில் 2 மட்டுமே விசாரணைக்கு வந்தன. மற்ற அனைத்திலும் விசாரணைக்கு முன்பே நான்போலீசாரால் விடுவிக்கப்பட்டேன். பொய் வழக்குகள் என்பதால் அவற்றை நீதிமன்ற விசாரணைக்கு போலீசார்உட்படுத்தவில்லை.

இப்போதும் பொடா சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். என் மீது போலீசார்கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு இது சமீபத்திய உதாரணம்.

என் மீதும், நக்கீரன் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று தனது தேர்தல் அறிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருந்தார். இதிலிருந்தே என் மீது பழி வாங்கும் போக்கில் இந்த சட்டம் பாய்ந்துள்ளதை நீதிமன்றம் உணரவேண்டும்.

மேலும், முன்னாள் டிஜிபி தேவாரம், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திக்கையான நமது எம்.ஜி.ஆரில், எனக்குஎதிராக பேட்டியும் கொடுத்துள்ளார். இதனால் காவல்துறை- ஆளும் கட்சிக்கு இடையிலான உறவை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்தப் பொய் வழக்கில் இருந்து என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கோபால்.

இந்த மனு 200 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை ஜூலை 7ம் தேதிநடக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+