மதுரை கலெக்டர் அலுவலகத்தை கலக்கிய நரிக் குறவர்கள்
மதுரை:
ஜாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதைக் கண்டித்து, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உருமிஅடித்தும், சாட்டையால் தங்களை அடித்துக் கொண்டும், பாட்டுப் பாடி, நிடனமாடியும் நூதனப் போராட்டம் நடத்திபரபரப்பூட்டினார்கள் நரிக் குறவர்கள்.
மதுரை அனுப்பானடி அருகே உள்ளது சக்கிமங்கலம் கிராமம். இந்தப் பகுதியில் ஏராளமான நரிக் குறவர்கள்வசிக்கின்றனர். அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. மேலும் இவர்களுக்கு ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் உள்ளன.
இருப்பினும் இவர்கள் நாடோடிகள் என்பதால் எந்த ஜாதியின் கீழ் சேர்ப்பது என்று தெரியாமல் ஜாதிச் சான்றிதழ்வழங்க மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது.
நீண்ட காலமாக ஜாதிச் சான்றிதழ் கோரி இவர்கள் போராடி வருகின்றனர். இந் நிலையில் தங்களது கோரிக்கையைவலியுறுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நூற்றுக்கணக்கான நரிக் குறவர்கள் கூடினர்.
அங்கு பாட்டுப் பாடி, நடனம் ஆடினர். பின்னர் உருமி மேளம் முழங்க தங்களைத் தாங்களே சாட்டையால்அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்த வித்தியாசமான போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலீஸார் தலையிட்டுஅவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications