நீதிபதி தலைமறைவு: வீட்டுக் கதவில் ஒட்டப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு
ஓசூர்:
கள்ளச் சாராய வியாபாரியின் மனைவியை மானபங்கப்படுத்த முயன்ற பாலக்கோடு குற்றவியல் நீதிபதிபன்னீர்செல்வம் தலைமறைவாகிவிட்டதால், அவரது பணி நீக்க உத்தரவு வீட்டுக் கதவின் மீது ஒட்டப்பட்டது.
பாலக்கோடு அருகே உள்ளது காவாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணின் கணவர் கள்ளச் சாராயவழக்கில் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை, பழனி என்பவர் செல்வியை அணுகி,வழக்கு தொடர்பாக பேசுவதற்காக மாஜிஸ்திரேட் கூப்பிட்டதாக கூறியுள்ளார். ஆனால் செல்வி செல்லமறுத்துவிட்டார்.
இதையடுத்து இரவில் தனியே இருந்த செல்வியின் வீட்டுக்கு நீதிபதி பன்னீர்செல்வம் வந்தார். அந்தப் பெண்ணைமானபங்கப்படுத்த முயன்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து செல்வி குரல் எழுப்பவே, கிராமத்தினர் ஓடி வந்து நீதிபதியை பிடித்து கட்டிப் போட்டுகாவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தத் தகவலை காவல்துறையினர் மாவட்ட நீதிபதிக்கும், உயர்நீதிமன்றதலைமை நீதிபதிக்கும் தெரிவித்துவிட்டு பன்னீர்செல்வத்தை விடுவித்தனர்.
இந் நிலையில் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் உயர் நீதிமன்ற நீதிபதி. இந்த சஸ்பெண்ட் உத்தரவைப்பெறக் கூட அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர்.
ஆனால், வீடும் பூட்டப்பட்டிருந்தது. நீதிபதி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரது வீட்டுக் கதவில்சஸ்பெண்ட் உத்தரவை அதிகாரிகள் ஒட்டினர்.
பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதால் பாலக்கோடு நீதிமன்றப் பொறுப்புகளை பென்னாகரம் பகுதிகுற்றவியல் நீதிபதி வைத்தியனாதன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நீதிபதி பன்னீர்செல்வம் மீது எந்தத் தவறும் இல்லை. அவரை சாராய வியாபாரியின் ஆட்கள்வீட்டிலிருந்து கடத்தி வந்து செல்வியுடன் வைத்து படம் எடுத்தனர் என்று அந்த ஊர் மக்களில் ஒரு பிரிவினர்கூறுகின்றனர். இதை ஒரு மனுவாக மாவட்டக் கலெக்டரிடமும் தந்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க சாராய வியாபாரிகளின் சதி என்றும் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications