வறட்சி காலத்தில் காவிரி நீர் பங்கீடு: கர்நாடகத்துக்கு காவிரி தொழில்நுட்ப குழு கெடு
டெல்லி:
வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிடுவது குறித்து 2 வாரத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகஅரசுக்கு காவிரி தொழில்நுட்ப குழு கெடு விதித்து உள்ளது.
கடந்த 9ந் தேதி அன்று டெல்லியின் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் வறட்சி காலத்தில்தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து முடிவு செய்ய தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.அப்போது தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து வறட்சி காலத்தில் காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து 2 வார காலத்தில் விளக்கஅறிக்க தருமாறு கர்நாடக மாநில அரசுக்கு தொழில்நுட்ப குழு உத்தரவிட்டது.
கர்நாடக அரசிடம் இருந்து பதில் வந்த பிறகு, வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிடுவது குறித்து பிரதமர்வாஜ்பாய் உத்தரவு பிறப்பிப்பார்.












Click it and Unblock the Notifications