நாளை பேச்சு: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகைகள் கிடைப்பது சந்தேகமே
சென்னை:
தமிழகம் தொடர்ந்து நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவாய்ப்பில்லை என நிதித்துறை அதிகாரிகள் சூசமாகத் தெரிவித்துள்ளனர்.
தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்ப வழங்கக் கோரி ஜூலை 2 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
ஓய்வு பெறும்போது வழங்கப்படும் நிதியை மொத்தமாக மீண்டும் பணமாகத் தர வேண்டும் (இப்போது பாதிரொக்கமாகவும் மீதி சேமிப்புப் பத்திரங்களாகவும் தரப்படுகின்றன), ஓய்வூதியம் குறைக்கப்பட்டதை மீண்டும்அதிகரிக்க வேண்டும், ஓய்வூதியம் பெற 33 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று புது விதிசேர்க்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், மற்றும் போனஸ் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர் சங்கங்கள் முன் வைத்துள்ளன.
இதை வழங்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி என அறிவித்துள்ளனர். இதையடுத்து அரசுஊழியர் சங்கத் தலைவர்களுடன் பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா முன் வந்தார். நாளை (வெள்ளிகிழமை)பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதிலும் அரசு பாலிடிக்ஸ் செய்தது. பேச்சுவார்த்தை தொடர்பாக முறையானஅறிவிப்பு வெளியிடாமல் குழப்பியது. சங்கங்களின் கண்டிப்பால் இறங்கி வந்தது.
நாளை கோட்டையில் காலை 11 மணிக்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுடன் நிதியமைச்சர்பொன்னையன், தலைமைச் செயலர் பொறுப்பு வகிக்கும் நிதித் துறைச் செயலர் என். நாரரயணன், பணியாளர்மற்றும் நிர்வாகத்துறைச் செயலர் மெய்கண்டதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் இப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர்.
இந்தப் பேச்சு தொடங்குவதற்கு முன்பாகவே நிதித்துறை அதிகாரிகள் மூலமாக சில தகவல்களை அரசுகசியவிட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதாகவும் இதனால் அரசு ஊழியர்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு இப்போது ரூ.865 கோடி பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது. எனவே அரசுஊழியர்களுக்குச் சலுகை அளிக்கும் சூழ்நிலையில் அரசு தற்போது இல்லை என்று நிதித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்தனர்.
கோரிக்கைகள் ஏற்கப்படாது என்று சொல்லி இப்போது பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. இதனால் இதில்சுமூகத் தீர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவே.
மேலும் தங்களது சலுகைகளை வாபஸ் பெறக் காரணமாக இருந்ததே நிதித்துறைச் செயலாளர் நாராயணன் தான்என்று அரசு ஊழியர்கள் கருதுகின்றனர். இந் நிலையில் லட்சுமி பிரனேஷ் தனது மகள் திருமணம் தொடர்பாகவிடுப்பில் இருப்பதால் நாராயணன் தான் அந்தப் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
நாளைய கூட்டத்திலும் அவர் தான் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் என்ற வகையில் முக்கியஅங்கம் வகிப்பார். இவரை வைத்துக் கொண்டு தங்களது சலுகைகளை திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கைஅரசு ஊழியர்களுக்கு இல்லை.
சங்க தலைவர் கோரிக்கை:
இந் நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ஸ்ரீதரன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்று நம்புகிறோம். அப்படி இல்லையென்றால்திட்டமிட்டபடி ஜூலை 2ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்.
மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு ரூ.7,000 கோடி நிதி பெற்றுள்ளது. வணிக வரியாக மாநில அரசு ரூ.10,000கோடியை வசூலித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவே நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கிறது. இனி கசப்புமருந்து தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.
இதனால் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் என்று நம்புகிறோம் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications