நம்பிக்கையை சுமந்து கொண்டு 35 ஆண்டு காலமாய்...
சென்னை:
35 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் சிக்கிய தனது கணவரை மீட்டுத் தரக் கோரி தமிழக மனித உரிமைஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார், சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப் படை போர் விமானியானசோமசுந்தரத்தின் மனைவி விஜயலட்சுமி.
1968ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியிலிருந்து 90 ராணுவ வீரர்களுடன்சண்டிகருக்கு விமானப் படையின் பயணிகள் விமானத்தை ஓட்டிச் சென்றார். அவருடன் துணை விமானிபி.என்.மல்ஹோத்ரா உள்பட 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
பாகிஸ்தான்- இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ரோதங் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதிடீரென்று தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடந்தது.
ஆனால், எங்குமே விமானம் சிக்கவில்லை. இறுதியில் ரோதங் மலைப் பகுதியில் விமானம் மோதி விபத்தில்சிக்கியிருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும்முடிவு செய்ய்பட்டது.
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியும் 9 மாத விசாரணைக்குப் பின் இதே முடிவையே அறிவித்தது.ஆனால், விமானத்தின் பாகங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் சமீபத்தில் கிடைத்த ஒரு தகவல் விஜயலட்சுமிக்குப் புதிய நிம்பிக்கையைக் கொடுத்தது. சோமசுந்தரம்இயக்கிச் சென்ற விமானத்தில் உதவி விமானியாக இருந்த பி.என்.மல்ஹோத்ரா பாகிஸ்தான் சிறையில் போக்கைதியாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திதான் அது.
மல்ஹோத்ரா உயிருடன் இருப்பதால் தனது கணவரும் உயிருடன்தான் இருப்பார் என்று நம்பும் விஜயலட்சுமிஇதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி மனித உமை ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சம்பந்தம், இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைஆணையத்துடன் தொடர்பு கொண்டு சோமசுந்தரம் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் விஜயலட்சுமி.
வயதாகிவிட்ட நான் மரணத்தை எந்த நேரமும் எதிர்கொள்ளக் காத்திருக்கிறேன். ஆனாஸ், நான் சாகும்போதுநான் திருமதி விஜயலட்சுமி சோமசுந்தரமா அல்லது விதவை விஜயலட்சுமியா என்பதைத் தெரிந்து கொள்ளவிரும்பவில்லை.
என் இறப்புக்கு முன் கணவரைப் பார்த்து விடுவேன், அசாத்திய நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜயலட்சுமி.
சோமசுந்தரம் உயிரோடு இருந்தால் அவருக்கு வயது 70 ஆக இருக்குமாம். இந்தியா-பாகிஸ்தான் இடையேஉறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயலட்சுமியின் நம்பிக்கை பலிக்க வாழத்துவோம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications