அயோத்தி விவகாரம்: வி.எச்.பி. ரகசிய ஆலோசனை
லக்னெள:
அயோத்தி விவகாரத்தில் சங்கராச்சாரியாரின் திட்டத்தை இஸ்லாமிய சட்ட வாரியம் நிராகரித்ததையடுத்து விஸ்வஹிந்து பரிஷத் தலைவர்கள் இன்று அவரச ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் அந்த அமைப்பின் சர்வதேசத்தலைவர் அசோக் சிங்கால் அயோத்திக்குப் புறப்பட்டார்.
நேற்று கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இன்றுலக்னெள வந்தார். மாரைடப்பால் பாதிக்கப்பட்டு லக்னெள மருத்துவமயிைல் அனுமதிக்கப்பட்டுள்ள ராமஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் ராமஹம்ஸ் பரமஹம்ஸை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அங்கு மூத்த வி.எச்.பி. தலைவர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அங்கு என்ன பேசப்பட்டதுஎன்ற விவரத்தை சிங்கால் விளக்க மறுத்துவிட்டார்.
ஆனால், அயோத்தி விவகாரத்தில் விட்டுத் தரவே கூடாது என்று பரமஹம்ஸ் தன்னிடம் கூறியதாக மட்டும்தெரிவித்த சிங்கால் உடனே அங்கிருந்து அயோத்தி புறப்பட்டுச் சென்றார். அங்கு சாதுக்களுடன் ராமர் கோவில்கட்டுவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
முன்னதாக கன்னியாகுமரியில் நிருபர்களிடம் பேசிய சிங்கால், எங்களைத் தனிமைப்பபடுத்தி விட பா.ஜ.க.முயல்கிறது. அதற்கான மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறாது.அயோத்தியில் புதிதாக மசூதி கட்டத் தேவையில்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருப்பதை நானும்வரவேற்கிறேன்.
அங்கு ஏற்கனவே 23 மசூதிகள் உள்ளன. அவற்றில் சில பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. எனவே புதிதாகஒன்றைக் கட்டத் தேவையில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications