அயோத்தி: என் கடமை முடிந்துவிட்டது- சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
அயோத்தி விவகாரத்தில் சங்கராச்சாரியார் முன் வைத்த திட்டத்தை அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தனது கடமை முடிந்துவிட்டதாக சங்கராச்சாரியார்தெரிவித்துள்ளார்.
சங்கராச்சாரியார் முன் வைத்த திட்டத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லை, மேலும் இந்தசமரசத் திட்டமே வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் உருவாக்கியதைப் போல உள்ளதாக இஸ்லாமியசட்டவாரியம் அறிவித்துள்ளது. கோவிலைப் பற்றி மட்டும் பேசி, மசூதியைப் பற்றி பேசாமலேயே விட்டால் இதுஎப்படி சமரசத் திட்டமாகும் என்றும் சட்ட வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று லக்னோவில் கூடிய இந்த வாரியத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சங்கராச்சாரியாரின் திட்டத்தைஒட்டுமொத்தமாக நிராகரித்தது.
இந் நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், அயோத்தி விவகாரத்தில் என்கடமை முடிந்துவிட்டது. என்னுடன் பேச்சு நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முன் வந்தால் நான் பேசத் தயாராகவேஉள்ளேன். என் கதவுகள் அவர்களுக்காக திறந்தே இருக்கும்.
அயோத்தி விஷயத்தை முஸ்லீம்கள் தங்களது கெளரவம் தொடர்பான விவகாரமாகக் கருதக் கூடாது. இந்தவிவகாரத்தில் நான் தலையிட்டதே மத அமைதி நிலவவும், ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தான்.இதனால் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு முஸ்லீம்கள் தானமாகத் தர வேண்டும்.
அதே நேரத்தில் காசி, மதுரா கோவில்கள் விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். அயோத்தியில் பாபர் மசூதிஇடிக்கப்பட்டது தவறு. அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்போதுஅதை நீக்குவது சரியல்ல. இதனால் சமூகப் பதற்றம் தான் ஏற்படும்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களால் தீர்ப்பு ஏற்படாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார்.
நேற்று சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய சங்கராச்சாரியார், நான் அனுப்பிய திட்டத்தில் குழப்பமோஅல்லது தெளிவின்மையோ இருந்திருந்தால் அது தொடர்பாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். அதற்குப்பிறகு திட்டத்தை நிராகத்திருக்கலாம்.
எனது திட்டம் நிராகக்கப்பட்டதால் நான் வருத்தப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவார்கள்.பிரச்சனையைத் தீர்ப்பது தொடர்பாக எனது முயற்சிகள் தொடரும் என்று கூறியிருந்தார்.


