சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஓராண்டாக அண்ணாமலைக்கு பொறுப்பு எதுவும் பாஜகவில் வழங்கப்படாத நிலையில் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பான லைவ் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளலாம்..
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றவர் அண்ணாமலை. திமுகவையும் அதிமுகவையும் மிகக் கடுமையாக விமர்சித்து பேசியதால் இளைஞர்கள் மத்தியில் அவரது செல்வாக்கு அதிகரித்தது.
இந்த நிலையில் அண்ணாமலையின் செயல்பாடுகளால் அதிமுக கூட்டணி உடைந்தது. மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக படுதோல்வியை சந்தித்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இரு கழகங்களும் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டு சேர்ந்தனர். அதனால் அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே இன்று அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
Jun 01, 2026, 5:19 pm IST
2 நாளில் அனைத்துக்கும் பதில் - அண்ணாமலை
புதிய கட்சி தொடங்குவதாக வெளியான தகவல். 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கு பதில் சொல்வதாக அண்ணாமலை விளக்கம்
Jun 01, 2026, 4:09 pm IST
‘தலைமை ஏற்க வா’ என அழைப்பு
வரும் 4ஆம் தேதி அண்ணாமலையின் பிறந்தநாளை ஒட்டி கோவையில் அவரது ஆதரவாளர்கள், “எங்கள் தலைவா தலைமை ஏற்க வா...” என போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
Jun 01, 2026, 2:33 pm IST
டெல்லி சென்ற அண்ணாமலை
அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேலிட அழைப்பை ஏற்று அண்ணாமலை டெல்லி விரைந்துள்ளார்.
Jun 01, 2026, 1:46 pm IST
டெல்லியில் பாஜக ஆலோசனை
டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது. இதில், தமிழகத்தில் இருந்து மகளிரணி தேசிய தலைவரான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
Jun 01, 2026, 1:27 pm IST
நிதின் நபினுடன் சந்திப்பு
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி துவங்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகும் நிலையில், இன்று டெல்லி சென்று நிதின் நபினை சந்திக்க உள்ளார்.
1:27 PM, 1 Jun

1:46 PM, 1 Jun
டெல்லியில் பாஜக ஆலோசனை
டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது. இதில், தமிழகத்தில் இருந்து மகளிரணி தேசிய தலைவரான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
2:33 PM, 1 Jun
டெல்லி சென்ற அண்ணாமலை
அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேலிட அழைப்பை ஏற்று அண்ணாமலை டெல்லி விரைந்துள்ளார்.
4:09 PM, 1 Jun
‘தலைமை ஏற்க வா’ என அழைப்பு
வரும் 4ஆம் தேதி அண்ணாமலையின் பிறந்தநாளை ஒட்டி கோவையில் அவரது ஆதரவாளர்கள், “எங்கள் தலைவா தலைமை ஏற்க வா...” என போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
5:19 PM, 1 Jun
2 நாளில் அனைத்துக்கும் பதில் - அண்ணாமலை
புதிய கட்சி தொடங்குவதாக வெளியான தகவல். 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கு பதில் சொல்வதாக அண்ணாமலை விளக்கம்