கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்
கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 3 வாரங்களாகிவிட்டன. மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது கோவை. கடந்த ஆட்சிகளில் கோவையின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரிய முக்கியத்துவம் வழங்கவில்லை. இந்நிலையில் தவெக ஆட்சியில் 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் வளர்ச்சிக்காக அடுத்தடுத்து 8 திட்டங்களை நிறைவேற்ற போவதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், "பொதுப்பணித்துறையை அரசுக்கு லாபம் தரக்கூடிய வகையில் மாற்ற வேண்டும். அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து பேசவுள்ளோம். வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். பணிகள் தரமாக இருக்க வேண்டும். குறுகிய இடத்தில் அதிக பயன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் உருவாக்க வேண்டும்.

கோவைக்கு 8 திட்டங்கள்
அப்படி இருந்தால் தான் அடுத்த 30 வருடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும். எல் அண்ட் டி புற வழிச்சாலை, ஜி.டி.நாயுடு மேம்பாலம் நீலாம்பூர் வரை திட்டங்களை நீட்டிப்பு செய்யவுள்ளோம். இந்த திட்டங்களில் சில சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளோம். கோவையில் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் மோசமாக உள்ளன. இந்த கட்டிடங்களை பழுது பார்க்க முடியுமா அல்லது இடித்து விட்டு புதிதாக கட்ட முடியுமா என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்.
கோவையின் வளர்ச்சிக்காக அடுத்தடுத்து 8 திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம். எந்த அரசு டெண்டருக்கும் கட்சி நிதிகள் இல்லை. கோவையில் பிரம்மாண்ட விளையாட்டு மையம் கட்டவுள்ளோம். அனைத்துத் துறைகளை ஒருங்கிணைத்து குழு உருவாக்கப்படும். நிலுவையில் உள்ள திட்டங்களை ஆராய்ந்து 60 நாட்களுக்குள் தீர்வு காண்போம். கோவைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் திட்டங்கள் அறிவிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications