ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!
சென்னை: திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவிற்கு வருகிறார்கள் எனவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது அவர்களது தனிப்பட்ட முடிவு எனக் கூறியுள்ளார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். மேலும், குதிரை பேரம் தொடர்பாக அதிமுக நீதிமன்றம் சென்றால் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் எரிசக்தித்துறை, மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவரது அறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்னளர்.

எந்த பாகுபாடுகளும் இல்லாமல் நீதித்துறை நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாக நியமனம் செய்யப்பட்டு எந்த விதத்திலும் சாமானிய மக்கள் ஏழை மக்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாக கூடாது. நீதிபதிகள் நீதிமன்றங்களை சிறப்பாக வழிநடத்த அரசு வழக்கறிஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சிடிஆர் நிர்மல்குமார்
கடந்த காலங்களில் இருந்த அரசு பல தவறான முறைகளில் கடந்த கால அரசுகளில் உயர்ந்த பதவிகளில் பணம் கொடுத்து பல கோடி ரூபாய் கொட்டி கொடுத்து பதவிகள் பெறப்பட்டது. கடந்த சில நாட்களாக தற்காலிகமாக வழக்கறிஞர்களை மெரிட் அடிப்படையில் நியமித்து வருகிறோம். பல முன்னாள் நீதிபதிகள் என்னை அழைத்து 40 வருடங்களுக்கு பிறகு மெரிட் அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவது சந்தோஷமாக உள்ளது எனக் கூறினார்கள். அது தான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி எங்கும் லஞ்சம், லாவண்யம் இருக்காது எந்த இடத்திலும் முறைகேடுகள் தவறுகள் இருக்காது.
வழக்கறிஞர்கள் நியமனம்
அரசு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்போடு நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படும். மாவட்ட அளவில் வழக்கறிஞர்கள் நியமிக்கும் பணிகளும் உச்சநீதிமன்றங்கள் உயர்நீதிமன்றங்கள் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நடைபெற்று வருகிறது. பல காலங்களாக பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது எனக் கூறுகிறார்கள். இதற்கு பிறகு அப்படி எதுவும் நடைபெறாது. எங்கும் லஞ்சம் இருக்காது 100% அவர்கள் மெரிட் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
நீதிபதிகள்
இதற்கு முன்பு அவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என கேட்ட போது வருத்தமாக இருந்தது. நீதிமன்றம் வெளியே காத்திருக்கும் பல லட்சம் மக்களுக்கு ஆன தீர்ப்பை அவர்கள் பெறுவார்கள் எந்த குறிக்கீடும் இல்லாமல் மெரிட் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு இடத்திலும் நியமன அடிப்படையில் நீதிபதிகள் பணியமர்த்தப்படுவார்கள். சமானிய மக்களுக்கு நீதி உடனடியாக கிடைக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம்
பல அழுத்தங்கள் வந்தாலும் நேர்மையாக நாங்கள் செயல்படுவோம், உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளது.அதனை பின்பற்றுவோம். ஒரு மாத காலத்திற்குள் அனைத்தும் நியமனங்களும் செய்யப்படும். மேகதாது விவகாரத்தில் அரசு அனுமதி வழங்கப்படாது. அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு எந்த முயற்சிகளை எடுத்தாலும் அரசு சட்டபூர்வமாக அதனை தடுக்கும் அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்.
குதிரை பேரம்
அதிமுகவினர் ஆளுநர் அர்லேகர் அவர்களை சந்தித்து தவெக குதிரை பேரம் செய்துள்ளதாக புகார் கொடுத்துள்ளனர். அதிமுக ஏன் பிளவுபட்டது என அவர்களே சொல்லி உள்ளனர். எடப்பாடியும் ஸ்டாலினும் இணைந்து ஆட்சியை கொண்டுவர முயற்சி செய்ததால் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள். ஸ்டாலின் குடும்பமும் எடப்பாடி குடும்பமும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்தபோது இந்த பிரச்சனை நடந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
அது அதிமுக மற்றும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை எனவே அதனை பிடிக்காமல் இவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள் அதுதான் நடந்த உண்மை. தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள முயலும் ஒரு கட்சியை எப்படி தொண்டர்களும் எம்எல்ஏக்களும் எப்படி மதிப்பார்கள் எனவும் மற்ற தலைவர்கள் அவர்களை எப்படி மதிப்பார்கள். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது அவர்களது தனிப்பட்ட முடிவு.
மு.க.ஸ்டாலின்
அந்தக் கட்சியின் தலைவரை நம்பி பயணிக்க முடியாது என அவர்கள் கட்சியிலிருந்து வெளியே வந்த பதவியை ராஜினாமா செய்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது. எங்கும் எந்த பேரமும் பேசவில்லை. 100 சதவீதம் அது உண்மை. இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என முயற்சி எடுத்த போது தான் பிளவு வருகிறது. திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளும் இதன் காரணமாக தான் வெளியே வந்தனர். எந்த இடத்திலும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மை நிரூபித்து ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். அதிமுக நீதிமன்றம் சென்றால் அதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள உள்ளோம்" என தெரிவித்தார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications