தர்மபுரி அருகே கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் மயக்கம்: 3 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
கள்ளச்சாராயம் குடித்த 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே உள்ள தண்டல்காரன்பேட்டை என்ற இடத்தில் நேற்றிரவு கள்ளச்சாராயம் விற்கும் இருவரிடம்சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர். குடித்த சில நிமிடங்களில் அவர்களுக்கு கண் பார்வை மங்கியது, வாந்தியும்ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.
இதைத் தொடர்ந்து அனைவரும் தர்மபுரி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் 3 பேன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்ற 2வியாபாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-->











Click it and Unblock the Notifications