சிறையில் ரெளடிகளால் தாக்கப்பட்ட முல்லைவேந்தன் ஜாமீனில் விடுதலை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் இன்று காலைவிடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் வெடிகள்வெடித்துச் சிதறியதில் அப்பாவி வாலிபர் ஒருவர் இறந்தார். இதையடுத்து அக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தமுல்லைவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறைவான அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுசேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு அவரை ரெளடி வெல்டிங் குமார் தாக்கினான். கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு மீண்டும் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சேலம் சிறையில்பாதுகாப்பில்லை என்பதால் கோவை சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு முல்லைவேந்தன் மனு தாக்கல் செய்திருந்தார். இதைவிசாரித்த கிருஷ்ணகிரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் அவருக்கு கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கினார்.
இதையடுத்து இன்று காலை கோவை சிறையில் இருந்து முல்லைவேந்தன் விடுதலை செய்யப்பட்டார். சிறைக்குவெளியே நிருபர்களிடம் பேசிய முல்லைவேந்தன், என்னைக் கொல்ல தமிழக அரசு ரெளடிகளைப்பயன்படுத்தியது. அக் கும்பல் பயங்கர ஆயுதங்களால் என்னை சிறையில் வைத்துத் தாக்கியது என்றார்.
அதிமுகவில் சேர மறுத்ததால் தான் முல்லைவேந்தனை தமிழக அரசு ரெளடிகளைக் கொண்டு தாக்கியதாக திமுகதலைவர் கருணாநிதி ஏற்கனவே குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications