தா.கி.படுகொலை: காவேரி மணியத்திற்கு போலீஸ் சம்மன்
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கி. கொலை வழக்கில், மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளரும், அக் கட்சியின்முக்கியமான மதுரை புள்ளியுமான காவேரி மணியத்திடம் மீண்டும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக திமுகவினரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான காவேரி மணியத்திடம் ஏற்கனவேபலமுறை விசாரணை நடத்தப்பட்டது.
சனிக்கிழமை மிக நீண்ட நேரம் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் நேற்றும் விசாரணைக்குவருமாறு கூறியிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில், திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு போலீஸார்கூறிவிட்டனர்.
இதையடுத்து இன்று அவர் காவல் நிலையத்தில் ஆஜராவார்.
மூத்த தலைவர்களில் ஒருவரான காவேரி மணியம் மதுரையில் பலமுறை கட்சியால் பலிகடா ஆக்கப்பட்டவராவ்ர்.பலமுறை அவருக்கு எம்.எல்.ஏ., எம்.பி. சீட் மறுக்கப்பட்டது. அவரை அதிமுக பலமுறை இழுக்கப் பார்த்தது.
ஆனாலும் கருணாநிதியின் தீவிர விசுவாசியான அவர் தான் ஒதுக்கப்படுவதை எதிர்த்து குரல் தந்துவிட்டுதொடர்ந்து கட்சிப் பணியாற்றி வருபவர்.
அழகிரி கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டிகளிடம் இருந்து விலகி நடுநிலையாக இருப்பவர்.












Click it and Unblock the Notifications