திருப்பதி: தரிசனத்துக்கு ஆகஸ்ட் முதல் கம்ப்யூட்டர் ரிசர்வேசன் வசதி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கம்ப்யூட்டர்கள் மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஆகஸ்ட்முதல் துவங்கப்படுகிறது.

வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மையம் சார்பில் வெங்கடேஸ்வரா மேல் நிலைப்பள்ளியில்இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமைத் துவக்கி வைத்துப் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகஅதிகாரி அஜய் கூறியதாவது:

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியை கல்லூரியாக மாற்ற கல்வித்துறைக்கு ரூ.25 லட்சம் செலுத்தவேண்டும். அதில், ரூ.12.50 லட்சத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செலுத்தும். மீதிப் பணத்தை பொதுமக்கள் பங்களிப்புடன் செலுத்த வேண்டும்.

திருமலையில் சுவாமி தரிசன டிக்கட்டுகள், தங்கும் விடுதி ஆகியவற்றை ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும்வசதியை முக்கிய நகரங்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.2 கோடி செலவில் இந்தப்பணிகளை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.

இதன் மூலம் ஆந்திர மாநிலம் மற்றும் சென்னை, வேலூர், பெங்களூர், மும்பை, கல்கத்தா, டெல்லி உட்பட முக்கியநகரங்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். இந்த மையங்களில்கட்டணம் செலுத்தி, தங்கும் அறையை முன் பதிவு செய்வதோடு, குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய டிக்கெட்வாங்கிக் கொள்ளலாம்.

இந்த வசதி வரும் ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும். இந்தப் பணிகளைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், வரும்செப்டம்பர் முதல் வேலூர் தகவல் மையத்தில் மட்டும் தற்காலிகமாக இத்திட்டம் துவக்கப்படும். இதன் மூலம்வேலூரிலிருந்து 20 தங்கும் அறைகளை பதிவு செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+