கள்ளத் தொடர்பு: 5 பேர் கொண்ட குடும்பமே தற்கொலை
கும்பகோணம்:
மனைவியில் கள்ளக் காதல் விவகாரம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கும்பகோணம் கக்கன் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 33). தனியார் கேபிள் டிவியில் வேலை செய்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மாலதி(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு காயத்ரி (14), சக்தி (11), கார்த்தி(7), கவுசல்யா(4)ஆகிய நான்கு குழந்தைகள்.
இந் நிலையில், மாலதிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்துமுருகனுக்கும் மாலதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டது.
இதையடுத்து அண்டை வீட்டினர் கூடி வந்து மாலதியை கண்டித்துவிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவங்களால் மனம்வெறுத்துப் போன முருகன், நேற்று காலை மொட்டையடித்துக் கொண்டு மகாமகம் குளத்தில் குளித்துவிட்டுவீட்டுக்கு வந்தார். வரும்போதே குளிர்பானத்தையும் விஷத்தையும் கொண்டு வந்தார்.
குளிர்பானத்தில் விஷத்தை கலந்த முருகன் அதைக் குடித்துவிட்டு, பின்னர் மனைவி மாலதி மற்றும் குழந்தைகள்சக்தி, கார்த்தி, கவுசல்யா ஆகியோருக்கும் கொடுத்தார். பானத்தில் விஷம் இருப்பது தெரிந்தும் மாலதி அதைக்குடித்தார். குழந்தைகள் தெரியாமல் குடித்தனர்.
இந் நிலையில் பள்ளியில் இருந்து மூத்த மகள் காயத்ரி வீடு திரும்பினார். அவருக்கும் விஷம் கலந்தகுளிர்பானத்தை முருகன் கொடுத்தார். ஆனால், அவர் குடிக்க மறுத்துவிட்டார். வீட்டில் அனைவரும் விஷம்குடித்துவிட்டு அரை மயக்கத்தில் இருப்பதைக் கண்ட காயத்ரி அலறியபடி தாத்தா முருகேசன் வீட்டுக்கு ஓடினார்.அனைவரும் விஷம் குடித்த விபரத்தைச் சொன்னார்.
இதையடுத்து முருகேசன் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, முருகன், மாலதி, சக்தி, கார்த்தி,கவுசல்யா ஆகிய 5 பேரும் வாயில் நுரை தள்ளி மயங்கிக் கிடந்தனர். அவர்களை கும்பகோணம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே 5 பேரும் உயிரிழந்துவிட்டனர். இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும்ஏற்படுத்தியுள்ளது.
-->-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications