தமிழ் கோவில்கள் கட்ட விடுதலை சிறுத்தைகள் முடிவு
மதுரை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படும் கோவில்களை கட்டவிடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பயத்தையும் வளர்க்கவேண்டியது தமிழர்களின் கடமை.
தற்போதுள்ள கோவில்களில் தமிழ் கலாச்சாராம் காணாமல் போய் விட்டது. எனவே, தமிழில் மட்டுமே அர்ச்சனைநடைபெறும் வகையிலான கோவில்களை மாவட்டங்கள் தோறும் கட்ட முடிவு செய்துள்ளோம்.
இந்தக் கோவில்களில் அனைத்துக் கடவுள்களும் இடம்பெறுவார்கள். தேவகோட்டை கண்டதேவி கோவில்தேரோட்டம் நின்று போக தலித் மக்கள் காரணமல்ல.
காஞ்சி சங்கராச்சாயார் உடனடியாக கோவில் நிர்வாகிகள், கிராம தலைவர்களுடன் பேச்சு நடத்தி, தலித் மக்களைதேரோட்டத்தில் கலந்து கொள்ளவும், கோவிலுக்குள் நுழையவும் அனுமதிக்கவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications