தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், 14 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் தான் 3 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர். இந் நிலையில் மேலும் 5 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமானவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால்.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த மாறன் என்றஅரசு ஊழியர் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளார்.

தனது மனுவில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத தன்னை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால்தன்னிச்சையாக டிஸ்மிஸ் செய்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அரசுக்கு தீர்ப்பாயம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

இந் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோபால், விழுப்புரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் கலெக்டராக இருந்த முகம்மது அஸ்லம்விருதுநகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றம் செய்யப்பட்ட மற்றொரு முக்கிய கலெக்டர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ள டாக்டர்ராதாகிருஷ்ணன். சேலம் மாவட்டத்தில் பல நல்ல நடவடிக்கைகள் மூலம் மக்களின் அன்புக்குப் பாத்திரமானார்.இந் நிலையில் அவரை சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சிவகங்கை கலெக்டர் சந்தோஷ் பாபுவுக்கு புதிய பதவி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முதல்வரின் சிறப்புப் பிரிவில் தனி அதிகாரியாக இருந்த எம். வீரசண்முகமணி நாகப்பட்டினம் மாவட்டகலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்புப் பிரிவுக்கு புதிய தனி அதிகாரியாக எஸ்வர்ணா (வயது 32) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சமூகநலத்துறை கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய எஸ்.ராமச்சந்திரன் சேலம் மாவட்டகலெக்டராக்கப்பட்டுள்ளார்.

தொல்பொருள் துறை கமிஷனராக இருந்த கே.அசோக்வர்தன் ஷெட்டி, சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்திமையத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+