குடித்து விட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி சஸ்பெண்ட்
சென்னை:
நீதிமன்றத்திற்கு காலதாமதமாக வருவது, குடித்து விட்டு வழக்குகளை விசாரிப்பது ஆகிய புகார்களின் பேரில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி மாணிக்கத்தின் செயல்பாடுகள் குறித்து உளுந்தூர்பேட்டை வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு புகார் அனுப்பப்பட்டது.
அதில், நீதிபதி மாணிக்கம் நீதிமன்றத்திற்கு உரிய நேரத்தில் வருவதில்லை, அப்படியே வந்தாலும், குடித்து விட்டுத்தான் வருகிறார். வழக்கு விசாரணையின்போது வக்கீல்களையும் தரக்குறைவாக
பேசுகிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையில், நீதிபதி மாணிக்கம் மீதான புகாரில் உண்மை இருப்பது கண்காணிப்புப் பிரிவுக்கு தெரியவந்தது. இதை தலைமை நீதிபதியிடம் கண்காணிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக மாணிக்கத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications