கோவை குடும்பப் பெண் கற்பழிப்பில் நர்ஸ் திகீர் வாக்குமூலம்
கோவை:
கோவையில் சமீபத்தில் தொழிலதிபரால் ஒரு குடும்பப் பெண் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டு, அதை படமாக எடுத்து வைத்து மிரட்டிய விவகாரத்தில் நர்ஸ் ஒருவர் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் மின் சாதன பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் உன்னி கிருஷ்ணன். இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் மனைவி சித்ராவுக்கு (வயது 30) குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த கற்பழித்தாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு உடந்தையாக இருந்த நர்ஸ் ஆலிக்ஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நர்ஸ் ஆலிக்சை பெண் போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ஆலிக்ஸ் பரபரப்பான பல தகவல்களைத் தந்துள்ளார். அதன் விவரம்:
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். எனது கணவர் ஜோசப் சென்னையில் வேலை பார்க்கிறார். நான் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்த்து வந்தேன். தற்போது வேலைக்கு செல்லவில்ல்ை. வேலாண்டி பாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தேன்.எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் பழக்கம் உண்டுஇந் நிலையில் ஆர்.எஸ்.புரத்தில் டி.வி.கடை நடத்தி வரும் உன்னிகிருஷ்ணனுடனும் பழக்கம் ஏற்பட்டது. அவர் அவ்வபோது இரவு நேரத்தில் எனது வீட்டிற்கு வந்து தங்கி செல்வார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி காலை 9.30 மணியளவில் நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது சித்ராவை காரில் அழைத்து கொண்டு எனது வீட்டிறகு உன்னி கிருஷ்ணன் வந்தார். சித்ரா காரிலேயே இருந்தார்.
உன்னிகிருஷ்ணன் மட்டும் வீட்டுக்குள் வந்தார். அப்போது காரில் இருந்த சித்ராவை வீட்டுக்குள் அழைத்து வரும்படி உன்னி கூறினார். உடனே நான் சித்ராவிடம் போய் என்னை உன்னி கிருஷ்ணனின் அண்ணி என்று சொல்லி வீட்டுக்குள் கட்டாயபடுத்தி அழைத்து வந்து உட்கார வைத்தேன்.
அப்போது சித்ராவை அனுபவிக்க போட்டு இருந்த திட்டங்களை என்னிடம் உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார். நானும் உதவி செய்வதாக கூறினேன்.
இதையடுத்து வீட்டில் இருந்த மயக்க மருந்தை கலந்து குளிர்பானம் தந்தேன். அதை அருந்திய சித்ரா மயங்கினார். உடனே அவரது உடைகளைக் களைந்தோம். பின்னர் உன்னி கிருஷ்ணன் அந்தப் பெண்ணை அனுபவிக்க ஆரம்பித்தார். வயாக்ரா மாத்திரையையும் உன்னி அருந்தினார்.
சித்ராவை உன்னி கிருஷ்ணன் அனுபவதித்ததை நான் வீடியோ கேமராவிலும், ஸ்டில் கேமராவிலும் பதிவு செய்தேன்.
கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்குப் பின் சித்ரா சுய நினைவுக்கு வந்தார். எழுந்ததும் தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம்.
பின்னர் அவரை மிரட்டி மீண்டும் என் வீட்டுக்கு வர வைத்தார் உன்னி கிருஷ்ணன். அப்போது அவரிடம் நாங்கள் அவரை நிர்வாணமாய் எடுத்த போட்டோக்களைக் காட்டினோம்.
அதை வைத்து மிரட்டியே பலமுறை சித்ராவை உன்னி கிருஷ்ணன் அனுபவித்தார். இந் நிலையில் உன்னிகிருஷ்ணனின் தொந்தரவு மிக அதிகமாகிவிடவே போலீசில் சித்ரா புகார் செய்திருக்கிறார்.
இவ்வாறு நர்ஸ் ஆலிக்ஸ் போலீசாரிடம் கூறியுள்ளார்.
முன்னதாக போலீசாரிம் சித்ரா கொடுத்த புகாரில், நான் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, எங்கள் பகுதியில் வசிக்கும் உன்னிகிருஷ்ணன் காரை நிறுத்தினார். என்னை கோவிலில் இறக்கி விடுவதாகச் சொன்னர். நானும் ஏறினேன்.
ஆனால், ஒரு வீட்டில் முன் போய் நிறுத்தி, இது என் அண்ணன் வீடு என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். உள்ளே இருந்து உன்னி கிருஷ்ணனின் அண்ணி என்று சொல்லிக் கொண்டு நர்ஸ் ஆலிக்ஸ் வந்தார்.
கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்று குளிர்பானம் தந்தார். அதைக் குடித்த பின்னர் என்னை மயக்க நிலையில் வைத்து கற்பழித்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
உன்னி கிருஷ்ணன் பா.ஜ.க. அனுதாபிவாயார். இதனால் உன்னி கிருஷ்ணனுக்கு ஆதரவாக கோவை பா.ஜ.க. பிரமுகர் அக்ஷயா ஆறுமுகம் களத்தில் இறங்கி சித்ராவை மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் உன்னி கிருஷ்ணனின் வீட்டிலும், கடையிலும் பெண் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அவரது கார், வீடியோ கேமராக்கள், புளு பிலிம் சிடிக்கள், வயாக்ரா மாத்திரைகள், ஹார்மோன் இன்ஜெக்சன்கள், சில டைரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட காரில் தான் சித்ராவை, உன்னி கிருஷ்ணன் அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையே நர்ஸ் ஆலிக்ஸ் குறித்தும் பரபரப்பான விவரங்கள் வெளியே வருகின்றன. கேரளத்தைச் சேர்ந்த இவர் 10ம் வகுப்பு படிக்கும்போதே பெங்களூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்தபோது கர்ப்பமானவராம். மாமா வீட்டின் அருகே உள்ள ஒருவருடன் சேர்ந்து சுற்றி கர்ப்பமாகியுள்ளார்.
இதன் பின்னர் ஆண் குழந்தை பிறக்க, குழந்தையுடன் ஆந்திராவில் அனந்தபூரில் குடியேறியுள்ளார். பினனர் தான் நர்சுக்குப் படித்துள்ளார். படிப்பை முடித்துவிட்டு கோவையில் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
அப்போது ரவிக்குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து உன்னி கிருஷ்ணனுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளது.
இந் நிலையில் போலீசாரிடம் ஆலிக்ஸ் தொடர்ந்து கோவையின் பல முக்கியஸ்தர்கள் குறித்தும் ஏடாகூடமான தகவல்களை எடுத்துவிட்டு வருகிறார். இதில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பெயர்களும் அடிபடுகின்றனவாம்.
விரைவில் உன்னி கிருஷ்ணனைப் போலவே அவர்கள் மீதும் பெண் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.
முதலில் இந்த விவகாரத்தில் தலையிட்டு சித்ரா தரப்பினரை மிரட்டி வந்த பா.ஜ.க. பிரமுகர் அக்ஷயா ஆறுமுகம், போலீசாரின் அதிரடியாக நடவடிக்கைகளைப் பார்த்த பின்னர் அடங்கிவிட்டார். விசாரணைக்கு இடையூராக இருந்தால் அவர் மீதும் போலீஸார் கை வைப்பார்கள் என்று தெரிகிறது.
-->











Click it and Unblock the Notifications