லண்டன் டூ சென்னை .. காலியாக வந்த இங்கிலாந்து விமானம்!
சென்னை:
விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, லண்டன் நகலிருந்து சென்னை வந்த பிரிட்டிஷ்ஏர்வேஸ் விமானம் பயணிகள் யாருமின்றி காலியாக வந்தது.
லண்டன், ஹீத்ரு விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கிளம்ப அவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும்,பயணிகளையும் ஏற அனுமதிக்கவில்லை. இந் நிலையில், சென்னை செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம், பயணிகள் இல்லாத காரணத்தால் முதலில் ரத்து செய்யப்படவிருந்தது.
ஆனால், மறு மார்க்கத்தில் சென்னையில் பயணிகள் காத்திருப்பார்கள் என்பதால், பயணிகளின்றி சென்னைக்குவிமானத்தை அனுப்ப நிறுவனம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து விமானிகள், ஏர் ஹோஸ்டஸ் பெண்கள், ஊழியர்கள் உள்பட மொத்தம் 14 பேர் மட்டுமேவிமானத்தில் பயணிக்க விமானம் சென்னை வந்து சேர்ந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தவிமானம், 303 பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் காலை 8.15 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications