ரவுடிகளைக் கொன்ற பொது மக்கள் கைது: கிராமத்தினர் போராட்டம்
சேலம்:
சேலம் மாவட்டம் பள்ளிக்கூடதாடனூர் கிராமத்தில் 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பொது மக்களை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு ரவுடிகளை கிராமத்து மக்களே சேர்ந்து அடித்துக் கொன்றனர்.
அடிக்கடி வந்து தொல்லை கொடுத்ததால் பொங்கி எழுந்த கிராம மக்கள் இரு ரவுடிகளையும் சரமாரியாக அடித்துக்கொன்றனர்.
இதுதொடர்பாக கிராமத்தினர் பலரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன், காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல், மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.
அதில், இரண்டு ரவுடிகளும் நீண்ட காலமாக கிராமத்து மக்களை தொல்லைப்படுத்தி வந்தனர். நிம்மதியில்லாமல்வாழ்ந்து வந்த நிலையில் காவல்துறையினர் ரவுடிகளைப் பிடிக்க முன்வரவில்லை. ஆனால், சம்பவத்தன்று வேறுவழியில்லாமல் எங்களது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டே ரவுடிகளை அடித்துக் கொன்றோம்.
எனவே கிராம மக்கள் செய்ததில் தவறில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தங்களதுமனுவில் கூறியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications