கூட்டணி தர்மத்தை மீறுகிறது திமுக.. சொல்கிறது பா.ஜ.க.
சென்னை:
கூட்டணி தர்மத்தை திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் மீறி வருவதாக பா.ஜ.க. தமிழகத் தலைவர்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக, மதிமுக, பா.ஜ.க.ஆகியவை ஒரே மேடையில் ஏறுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என்றார் அவர்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் மாற்றங்கள் வரலாம் என்றரீதியில் கருணாநிதி பேசி வருகிறார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு யார் வெளியே போவார்கள் என்று தெரியாது என்றும் கூறியுள்ளார்.
திமுகவின் செயல்பாடுகள் காரணமாகத்தான் பா.ஜ.கவும் அதிமுகவும் நெருங்குவது போன்ற ஒரு தோற்றம்உருவாகியுள்ளது. 1999ம் ஆண்டில் வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில், அதிமுக ஆதரவுடன்கவிழ்க்கப்பட்டது. அன்று முதல் நாங்கள் அதிமுகவுடன் சேர்ந்து மேடையேறவே இல்லை.
நாங்கள் எங்களது நிலையில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம். கூட்டணி தர்மத்தையும் கடைபிடித்துவருகிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இருக்கும் வரை அதில் அதிமுக நுழைய வாய்ப்பே இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் உள்ளோம், ஆனால், மாநிலத்தில் பா.ஜ.கவுடன் ஒட்டும் இல்லை உறவும்இலலை என்று திமுக கூறி வருவது ஏமாற்றுத்தனமான செயல்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் திமுகவுடன் சேர்ந்து மத்திய அரசும் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. (இது தொடர்பாக திமுக,. பா.ம.க., மதிமுகவினர் நேற்றுபிரதமர் வாஜ்பாயிடம் மனு கொடுத்தனர்).
நாங்கள் அதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுகமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எங்களிடம் கோரியது. அதை அப்போது நாங்கள்ஏற்கவில்லை.
அதே போலத் தான் இப்போதும். திமுக சொல்கிறது என்பதற்காக அதிமுக அரசுக்கு எதிராக எப்படி செயல்படமுடியும்?.
அரசு ஊழியர் போராட்டமே தவறு. சட்ட விரோதமானது என்று தமிழக அரசு சொன்னதைத் தான் உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டுதலால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்என்றார்.
இந் நிலையில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்தில் பங்கேற்காதஊழியர்களுக்கு சம்பள உயர்வை முதல்வர் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications