அழகிரியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்ப்பைசென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரிக்கு மதுரை செஷன்ஸ்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் அழகிரி.
இந்த மனுவை நீதிபதி கனகராஜ் விசாரித்து வந்தார். இன்று நடந்த விசாரணையின்போது பேசிய அழகிரியின்வழக்கறிஞர் நடராஜன், தா.கிருட்டிணன் கொலை வழக்கில், நேரடி சாட்சிகள் கிடையாது. எனவே, சாட்சிகளைஅழகிரி கலைத்து விடுவார் என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்என்றார்.
அதற்கு அரசுத் தரப்பு வக்கீல் பதில் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கனகராஜ், இந்த மனுமீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
திமுகவினர் காவல் நீட்டிப்பு:
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக போலீஸில் சரணடைந்த மதுரை அவனியாபுரம் பேரூராட்சி வார்டுகவுன்சிலர் கார்த்திகேயனின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேயன் கடந்த வாரம் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் மதுரை 6-வது நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். அவரது காவலை ஜூலை 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.இதற்கிடையே, கார்த்திகேயனை போலீஸ் காவலில் ஒப்படைக்குமாறு கோரி போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக போலீஸாரால் கூறப்படும் இப்ராகிம் சுலைமான் சேட்டின்காவலும் ஜூலை 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications