மேட்டூர் அணையில் தோண்டப்பட்ட சட்ட விரோத கிணறுகளை மூட உத்தரவு
சேலம்:
மேட்டூர் அணைப் பகுதியில் விதிகளை மீறி வெட்டப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கிணறுகளை மூட சேலம்மாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை அவரே நேரில் சென்று சில கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த பம்பு செட்டுகளை அகற்றினார்.
மேட்டூர் அணையில் தற்போது நீர் இல்லை. இந் நிலையில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பொதுமக்கள்பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அணைக்கு அருகாமையில் உள்ளவர்கள், அணைக்குள் கிணறுகளை வெட்டிஅதிலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
அணைப் பகுதியில் இதுபோல நூற்றுக்கணக்கான கிணறுகள் உருவாக்விடடன. மேலும் கிணறுகளைத்தோண்டுவதற்காக வெடிக வைத்து பாறைகளை தகர்த்து வருகின்றனர். இதனால் மேட்டூர் அணைக்கட்டேசேதமடையும் சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து சட்ட விரோகமாக அணைக்குள் தோண்டப்பட்ட கிணறுகளை இரண்டே நாட்களிலும் மூடவும், இனிஇங்கு கிணறுகள் தோண்டுவதைத் தடுத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
இதுபோன்ற கிணறுகளினால் ஆற்றில் நீரோட்டம் குறைந்து தண்ணீரைத் தேக்கி வைப்பது மிகவும் சிரமமாகி விடும்என்று ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications