கருணாநிதிக்கு சென்னை கோர்ட் நோட்டீஸ்
சென்னை:
திமுக நிர்வாகிகள் தேர்தல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த நாமதேவன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில்,சென்னை மாநகராட்சி வார்டு எண் 31 முதல் 40 வரையிலானவற்றிற்கு கடந்த மே 21ம் தேதி கட்சித் தேர்தல்நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
பின்னர் இது 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த நாளில், 31வது வார்டில் (பெரம்பூர்) தேர்தல்நடக்கவில்லை.
மற்ற வார்டுகளுக்குத் தேர்தல் நடந்தது. பெரம்பூர் பகுதி திமுக செயலாளர் பதவிக்கு நான் போட்டியிட்டேன்.
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னொரு நாளில் நடத்தப்படும் என்றும் கட்சிப் பத்திரிக்கையானமுரசொலியில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், அதே முரசொலியில், அடுத்த நாள் 31-வது வார்டுக்குரிய திமுக நிர்வாகிகள் போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
வெங்கடேசன் என்பவர் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுரையின்பேரில்தான் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகளில் தலைவர்கள் தலையிடுவதை கோர்ட் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், வெங்கடேசன்தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த 13-வது உதவி நீதிபதி, திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், தேர்தல்அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications