மயூரணி கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையில் இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.விசாரணையிலிருந்து சி.பி.ஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

மயூரணி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான சோலைமலைத் தேவரின் மகள் கண்ணாம்பாள்இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மயூரணி வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் சோலைமலைத் தேவர். அவரது மனைவிராக்கம்மாள் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தேவரின் மகள் கண்ணாம்பாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரைஅண்ணா நகர் போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

வழக்கை பாரபட்சமின்றி இவர்கள் நடத்தவில்லை. மயூரணியின் தந்தை இலங்கை அரசில் முக்கியப் பதவிவகிப்பவர் என்பதால் அவரது நெருக்குதலுக்குக் கட்டுப்பட்டு அவருக்கு சாதகமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

எனவே இந்த வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். வழக்கை சிபிசிஐடிபோலீஸிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார்.

சோலைமலைத் தேவர் உள்ளிட்டவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்டனர். தேவர் வீட்டில்தங்கியிருந்த மயூரணி, கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+