லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், சப்--இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது
தஞ்சாவூர்:
குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கில் ரூ. 3000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்ட்,ஏட்டையா ஆகியோர் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர், அய்யம்பேட்டை,அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும், இவரது சகோதரர்கள்குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.
இது தொடர்பான சமீபத்தில் அடிதடி நடந்தது. இதையடுத்து மூர்த்தி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார்.
அப்போது ரூ. 3,000 லஞ்சம் கொடுத்தால் உங்களுக்கு சாதகமாக வழக்கை மாற்றுவதாக மூர்த்தியிடம் ஏட்டையாசெல்வராஜ் கூறியுள்ளார்.
பணத்தை இன்ஸ்பெக்டர் ஜோதிராமன், சப்-இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோருக்குக் கொடுத்தால் உடனடியாகபிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று செல்வராஜ் கூறியுள்ளார்.
பணம் கொடுக்க விரும்பாத மூர்த்தி இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் தெவித்தார்.அவர்கள் கொடுத்த யோசனைப்படி பணத்தைக் கொண்டு போய் கொடுத்தபோது, இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டையா ஆகியோரை லஞ்சஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் கும்பகோணம் நீதிபதி மீனாள் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு இரவே ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் 15நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
போலீஸார் கூண்டோடு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications