22,106 பொறியியல் கல்லூரி சீட்கள் காலி
சென்னை:
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 22,106 பொறியியல் கல்லூரி சீட்கள் காலியாக உள்ளதாகசனிக்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றைச் சாளர முறைப்படி மாணவர் இடங்களை நிரப்புவதற்கானகலந்தாய்வு (கவுன்சிலிங்) நடந்து வருகிறது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 22,106 சீட்கள் காலியாக உள்ளன.
அனைத்துமே சுய நிதி பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்தவை. அண்ணா பல்கலைக்கழக சீட்கள்ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டன.
அண்ணா பல்கலைக்கழக வெளிமாநில மாணவர்களுக்கான பிரிவில் கிழக்கு மற்றும் மேற்குப்பிராந்திய பிரிவில் தலா ஒரு சீட் காலியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பொறியியல் சீட்கள் தனியார் கல்லூரிகளிடம் ஒப்படைக்கப்படும். சென்னைஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பொறியியல் கல்லூரி சீட்கள், சுயநிதிக் கல்லூரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் இடங்களைநிரப்புவதற்கான கவுன்சிலிங் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது.
தற்போதைய நிலவரப்படி 21,000 மாணவர் இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணாபல்கலைக்கழகம் கூறியுள்ளது.
சிறப்பு நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை மறுநாள் கவுன்சிலிங்நடைபெறவுள்ளது.
அதன் பிறகு காலியாக உள்ள சீட்கள், சுய நிதி பொறியியல் கல்லூரி நிர்வாகங்களிடம்ஒப்படைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 20,000 சீட்கள் வரை காலியாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications