சோனியா--வாசன் கோஷ்டி சந்திப்பு: சோ.பா, இளங்கோவனை மாற்ற கோரிக்கை
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியஇருவரையும் மாற்றி விட்டு ஒரே தலைவரை நியமிக்கக் கோரி ஜி.கே.வாசன் ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 14 பேர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தமிழக பார்வையாளர் கமல் நாத் ஒரு தலைப்பட்டசமாக செயல்படுவதால் அவரையும் நீக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்துவருகிறது.
காங்கிரஸ் கட்சியில தினசரி ஏதாவது ஒரு கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காமராஜர்நூற்றாண்டு விழாவையொட்டி கொஞ்ச நாட்களாக அமைதி நிலவியது.
தற்போது மீண்டும் பூசல் வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த 14 தமிழகஎம்.எல்.ஏக்கள் டெல்லி விரைந்தனர்.
சோ.பா.வும் வேண்டாம், இளங்கோவனும் வேண்டாம், புதிதாக ஒரு தலைவரை, ஒரே ஒருதலைவரை நியமியுங்கள் என்று சோனியாவைச் சந்தித்து இவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும்கமல்நாத் இளங்கோவனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும்கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ, காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு கிடைக்காதுஎன்பதை அவ்வப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினர் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications