திருப்பதி அருகே 6 பேர் தற்கொலை: தர்மபுரியை சேர்ந்தவர்கள்
திருப்பதி & தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட விவசாயக் குடும்பம் ஒன்று திருப்பதி அருகே தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டது.
![]() |
நேற்று கீழ் திருப்பதியில் இருந்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் மேல் திருப்பதிக்கு சென்றபோது காளிகோபுரம் என்ற இடத்தின் அருகே பயங்கர துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து சிலர் காட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது மரத்தில் 2 பெண்கள், 2 ஆண்கள், 2 குழந்தைகள்ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது உடல்கள் அழுக ஆரம்பித்திருந்தது.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றினர்.
தற்கொலை செய்து கொண்ட ஆண்களின் சட்டைகளில் திப்பம்பட்டி சன் டெய்லர்ஸ், அரியகுளம் கண்ணன்டெய்லர்ஸ் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி, அரியங்குளம் பகுதிகளில் தமிழக போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கிடைத்த விவரம்:
சாணார் பள்ளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி என்கிற முனியப்பன். விவசாயியான இவர் அதிமுககிளைச் செயலாளராகவும் உள்ளார். இவரது முதல் மனைவி எல்லம்மாள்(வயது 45). இவருக்கு கனகராஜ் (வயது18), கர்ணண்(வயது 16) என்ற 2 மகன்கள்.
பிளஸ் டூ முடித்த கனகராஜுக்கு சமீபத்தில் ராணுவத்தில் வேலை கிடைத்தது. பணி நியமன உத்தரவை எதிர்பார்த்துகாத்திருந்தார். கர்ணன் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
முனியப்பனின் 2-வது மனைவி மாலதி (வயது 25). இவர் முதல் மனைவி எல்லம்மாளின் சித்தப்பா மகள் ஆவார்.இவருக்கு பூங்கொடி(வயது 7), கோது (வயது 6) என்ற 2 மகள்கள்.
இவர்கள் இருவரும் கிருஷ்ணாபுரத்தில் பள்ளியில் படித்து வந்தனர்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் கனகராஜ் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.
முனியாண்டி தர மறுத்துள்ளார். தாய், சித்தி ஆகியோர் கனகராஜூக்கு ஆதரவாகப் பேச முனியப்பனுக்கும்மனைவிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் முனியப்பன் தனது இரு மனைவிகள், குழந்தைகளையும் விட்டுவிட்டு மூன்றாவது திருமணம் செய்யும்திட்டத்திலும் இருந்தார். இது தொடர்பாகவும் மோதல் எழுந்தது.
அப்போது மனைவிகளையும் குழந்தைகளையும் முனியப்பன் வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கிறார். இதனால்மனமுடைந்த மனைவிகள், மகன்கள், மகள்கள் அனைவரும் இரவில் முனியப்பனுக்குத் தெரியாமல் வீட்டை விட்டுவெளியேறினர்.
திருப்பதிக்கு சென்ற அவர்கள் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வனப் பகுதியில்மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முனியப்பன் வீட்டில் நடந்த தகராறு பக்கத்து வீட்டினர்மற்றும் உறவினர் மூலம் வெளியில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் தூக்கில் தொங்கி எப்படியும் 5 நாட்களாவது ஆகியிருக்கும் என்று தெரிகிறது. அதன் பின்னரே நாற்றம்வரத் தொடங்கி வெளியில் தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications