காவிரி நீர் பங்கீடுக்கு புதிய திட்டம்: தமிழகம் ஏற்குமா?
டெல்லி:
தமிழகமும் கர்நாடகமும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக புதிய திட்டத்தை மத்திய அரசுஉருவாக்கியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைகர்நாடகம் தர வேண்டும். ஆனால், அதைத் தருவது இல்லை. வெள்ளம் வந்து அணைகளுக்கு பிரச்சனை ஏற்படும்நிலை ஏற்படும்போது மட்டுமே தண்ணீரைத் திறந்துவிடுகிறது கர்நாடகம்.
கேட்டால் தனக்கே பற்றாக்குறை இருப்பதாக சொல்கிறது. இதையடுத்து பற்றாக்குறை காலத்தில் நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்து புதிய திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள தொடங்கப்பட்டன.
இது தொடர்பாக நடந்த விவாதங்களின்போது தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா, குறுவைசாகுபடிகளை, ஒரே சாகுபடியாக மாற்ற வேண்டும் என்று கர்நாடகம் கூறியது. இதை தமிழகம் மிகக் கடுமையாகஎதிர்த்தது.
குறுவையையும் சம்பாவையும் ஒரே சாகுபடியாக மாற்றினால் அந்த சாகுபடிக்கு வருடந்தோறும் போதிய நீரைத்தருவோம் என கர்நாடகம் கூறியது. ஆனால், சாகுபடி குறித்தெல்லாம் எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்,தர வேண்டிய நீரை மட்டும் விட்டால் போதும் என தமிழகம் தெரிவித்தது.
இதையடுத்து இரு மாநிலங்களின் நிலைகளையும் ஆராய்ந்த காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான நிபுணக் குழுபுதிய திட்டத்தைத் தயாரித்துள்ளது. அதை தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரிநதி நீர் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்தப் புதிய திட்டம் குறித்து விவரம் ஏதும் வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. விரைவில் இரு மாநிலமுதல்வர்களையும் அழைத்து இது குறித்து வாஜ்பாய் ஆலோசிக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், இத் திட்டம் கர்நாடகத்துக்கு சாதகமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளன. தமிழககாவிர் டெல்டாவில் விவசாய முறையை மாற்றியமைக்கவும், சாகுபடியை ஒன்றாக்கவும் மத்திய அரசால் யோசனைவைக்கப்பட்டால் அதை தமிழக அரசு ஏற்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications