தூத்துக்குடி கடலில் பிடிபட்ட ரேடியோ டிரான்ஸ்மிட்டருடன் கூடிய மீன்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடல் பகுதியில் கழுத்தில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கட்டப்பட்ட விறால் மீன்பிடிபட்டுள்ளது.
தூத்துக்குடி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விறால் மீன் பிடிபட்டது.ஆனால் அதன் கழுத்தில் சிவப்பு நிறத்தில் பிளாஸ்டிக் ரப்பர் பட்டை இருந்தது.
இதனால் குழம்பிய மீனவர்கள் தூத்துக்குடி மீன் வளக் கல்லூரியில் அதை ஒப்படைத்தனர்.
கடல் ஆய்வுக்காகவும், மீன்களின் இடப் பெயர்வு குறித்து ஆராயவும் இதுபோல ரேடியோடிரான்ஸ்மிட்டர்கள் மீன்களில் பொருத்தப்பட்டு கடலில் விடப்படுவது வழக்கம் என்று மீன் வளக்கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மீன் வள ஆராய்ச்சி நிறுவனங்களுக்குத்தகவல் கொடுக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications