கோர்ட்டில் கோபால் ஆஜர்: போலீசுக்கு நீதிபதி கண்டனம்
சென்னை:
நீதிமன்றத்தின் வாரண்ட் இல்லாமல் நக்கீரன் கோபாலை, சிறையிலிருந்து கொண்டு வந்த போலீஸாருக்கு சென்னைமுதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜெயபால் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக எழுதியதாக கூறி தமிழக அரசு கோபால் மீது சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இப்போது பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ள கோபாலை, இந்த அவதூறு வழக்குத் தொடர்பாகசென்னை மத்திய சிறையிலிருந்து போலீசார்ா இன்று அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
ஆனால், சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கான வாரண்ட்டை போலீஸார் பெறவில்லை.இதனால் கோபமடைந்த நீதிபதி ஜெயபால், வாரண்ட் இல்லாமல் ஏன் கூட்டி வந்தீர்கள்? என்று கேட்டார். போலீசார்பதில் சொல்லாமல் முழித்தனர்.
பின்னர் நீதிமன்றத்தின் வாரண்ட்டைப் பெறாமல் கோபாலை வெளியே அனுப்பிய சிறை நிர்வாகத்தையும் நீதிபதிகடுமையாகக் கண்டித்தார்.
பின்னர் வழக்கை வருகிற 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications