கோவில் பூசாரி உள்பட 2 பேர் படுகொலை: மனைவியே கொன்றாரா?
சென்னை:
சென்னை அருகே காரப்பாக்கம் என்ற இடத்தில் கோவில் பூசாரியும், இன்னொரு நபரும் பயங்கரமாக கொலைசெய்யப்பட்டனர்.
சென்னை அருகே உள்ள துரைப்பாக்கத்தை அடுத்துள்ளது காரப்பாக்கம். இங்கு கங்கையம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலின் பூசாரியாக இருந்தவர் துலுக்காணம். நேற்று இரவு துலுக்காணம், ராமலிங்கம் என்பவரும்கோவிலில் படுத்துத் தூங்கினர்.
இன்று காலை இருவரும் பிணமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். ராமலிங்கத்தின் கழுத்து துண்டால்நெரிக்கப்பட்டிருந்தது. துலுக்காணத்தை இரும்புத் தடியால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
கோவிலில் உள்ள 3 உண்டியல்களில் 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்த பணத்தை திருடர்கள்எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று போலீஸார் கூறுகிறார்கள்.
உண்டியல் உடைப்புக்காக மட்டும் இந்த கொலை நடக்கவில்லை என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.ராமலிங்கத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், தனது மனைவியால் உயிருக்குஆபத்து உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தான் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார்கொடுத்திருந்தார்.
இதனால் அவரது மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications