கொல்லப்பட்ட தாதா வீரமணியின் தம்பிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தாதா வீரமணியைப் பிடிக்க முயன்ற இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களைத் தாக்கிய வீரமணியின்தம்பிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்த ரவுடி வீரமணி கடந்த 27ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டான். வழக்குவிசாரணைக்காக அழைத்தபோது வர மறுத்த வீரமணியும், அவனுடன் இருந்த கூட்டாளிகளும் இரண்டுசப்-இன்ஸ்பெக்டர்களையும் அரிவாள்களால் தாக்கினர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டதில் வீரமணி இறந்ததாக போலீஸ் கூறுகிறது.

இந் நிலையில் வீரமணியின் தம்பிகள் செல்வமணி, கலைமணி, தமிழ் மணி, மணிமாறன் ஆகியோரை போலீஸார்மெரீனா கடற்கரையில் கைது செய்தனர். தனது அண்ணனின் சாவுக்குப் பழி வாங்க இந்தக் கும்பல் போலீசாரையேதாக்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.

மேலும் வீரமணி விவகாரத்தில் புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன. கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்குமுன் அவனை நேரில் அழைத்த சென்னை கமிஷ்னர் விஜய்குமார், உன் ரெளடித்தனத்தை உடனே நிறுத்திக்கொள்ளாவிட்டால் உனக்கு சாவு நிச்சயம் என்று எச்சரித்து அனுப்பினாராம்.

இதைத் தொடர்ந்து அவனது இரண்டாவது மனைவி உதயா சில லட்சம் பணத்துடன் கமிஷ்னர் அலுவலகம் வந்துகமிஷ்னரைச் சந்தித்து இந்தப் பணத்தை எடுத்துக்குங்க.. என் கணவர் தப்பு பண்ண மாட்டார் என்று கூறியுள்ளார்.

அவரை மிகக் கடுமையாக எச்சரித்த விஜயகுமார், முதலில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுமாறுகெட்-அவுட் சொல்லி விரட்டியுள்ளார்.

இதையடுத்து கமிஷ்னர் விஜய்குமாரையே போட்டுத் தள்ள வீரமணி திட்டமிட்டதாக உளவுப் பிரிவினர் தகவல்தரவே என்கெளன்டருக்கு திட்டம் போடப்பட்டது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+