செல்போன் மூலம் விபச்சாரம்: குற்றாலத்தில் 3 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்தில் செல்போன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் உள்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளை இந்தப் பெண்களின் புரோக்கர்கள் தொடர்பு கொண்டு இவர்களதுசெல்போன் நம்பர்களைத் தருவது வழக்கம். இதையடுத்து அவர்கள் இந்தப் பெண்களைத் தொடர்பப கொண்டுபேசி விபச்சாரத்துக்கு அழைப்பார்களாம்.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோட்டைச் சேர்ந்த சாந்தினி (வயது 34), சென்னையைச் சேர்ந்தமகாலட்சுமி (22), மதுரையைச் சேர்ந்த காயத்ரி (24) ஆகிய பெண்கள் மற்றும் அவர்களுடன் உல்லாசமாக இருக்கவந்த மதுரை, திருச்செங்கோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த வாலிபர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்,
இந்தப் பெண்களிடம் இருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications