தலையில் தேங்காய் உடைத்த போது 3 பேர் மண்டை உடைந்தது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

கோவில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்தபோது 3 பக்தர்களின் தலை உடைந்தது. இதனால் அங்குபரபரப்பு ஏற்படவே போலீஸார் குவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் செல்லக்குடி என்ற கிராமத்தில் வீரலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்குஆண்டுதோறும் ஆடி மாதத்தில்2 நாள் திருவிழா நடைபெறும். அந்த சமயத்தில் பக்தர்கள் தலையில் பூசாரிதேங்காய் உடைப்பார். மேலும், பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இன்றும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் காலையில் நடந்தன. பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.பின்னர் கோவில் பூசாரி ஒவ்வொரு பக்தன் தலையிலும் தேங்காயை உடைத்துக் கொண்டே வந்தார்.

அப்போது 3 பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தபோது, அவர்களது தலை உடைந்து ரத்தம் கொட்டியது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மண்டை உடைந்த பக்தர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் பூசாரியைஅடிக்கப் பாய்ந்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மீதமுள்ளபக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் மீது சாட்டையால் அடித்தனர்.

மண்டை உடைந்த பக்தர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+