திமுக வெளியேறினால் அதிமுக உள்ளே வரும்: பா.ஜ.க.
ஈரோடு:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கருத்துக்களை ஏற்கக்கூடிய கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்போம்என தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணி அமையலாம் எனமறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நான் மேற்கொண்டுள்ள எழுச்சி ரத யாத்திரைக்கு கிராமப்புற மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. வாஜ்பாய்அரசின் நான்காண்டு கால சிறப்பான செயல்பாடுகளை தமிழக மக்கள் வரவேற்கின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலை. லட்சக்கணக்கான இடங்களில்ராமர் கோயில் இருக்கலாம். ஆனால், ராமஜென்ம பூமி என்பது அயோத்தி தான். அங்கு ராமருக்கு கோயில்கட்டுவது தான் சிறப்பு.
பாபர் என்ற மன்னனால் ராமர் பிறந்த பூமி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அந்த இடத்தை மீட்பது தன்மானஉணர்வுக்கு விடப்பட்ட சவால். எனவே, அந்த இடத்தில் ராமர் கோயில் எழுபுவதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது.
அதை கருத்தில் கொண்டு தான் மழுங்கிப்போன தன்மான உணர்வை தட்டி எழுப்பி வருகிறோம். அயோத்தில்ராமர் கோயில் கட்டுவதை பெரும்பாலான இஸ்லாமியர்களே எதிர்க்கவில்லை.
போலி மதச்சார்பின்மை பேசும் சில கட்சிகள் தான் இதை எதிர்த்து வருகின்றன.
அயோத்தி மற்றும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை ஆதரித்து ஜெயலலிதா கருத்து தெரிவித்திருப்பதுஅவரது தைரியத்தை காட்டுகிறது. தமிழகத்தில் பா.ஜ.கவுடன் உறவு இல்லை என கூறிவரும் திமுக, மத்தியில்வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநயாக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
அந்தக் கட்சி அங்கு இருக்கும் வரை அதிமுக, கூட்டணிக்கு வருவது சாத்தியமில்லாத ஒன்று. அதே நேரத்தில்நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கருத்துக்களை ஏற்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தலைமையிடம்வலியுறுத்துவோம் என்றார்.
இதன்மூலம் அதிமுக கூட்டணிக்காக முயற்சிப்போம் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications