ஜெ. அரசிடம் பெரியாரும் தப்பவில்லை: சிலைக்கு சீல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பெரியார் சிலையை மூடி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை திராவிடர் கழக அலுவலக வளாகத்தில் பெரியார் அறக்கட்டளையின் சார்பில் பெரியார் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை வரும் 7ம் தேதி திறக்கப்பட இருந்தது.
இந் நிலையில் பெரியார் சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென மூடி சீல் வைத்தனர். இது குறித்துபுதுக்கோட்டை தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் கூறுகையில், தனியார் இடத்திலோ அல்லது பொதுஇடத்திலோ சிலை வைப்பதாக இருந்தால் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
ஆனால், பெரியார் சிலை வைப்பதற்கு அனுமதி பெறப்படவில்லை. எனவே சிலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுஎன்றார்.
இதையடுத்து அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் தற்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து வந்த திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி சமீபகாலமாக திமுகவை ஆதரிக்கஆரம்பித்துள்ளார். இதன் விளைவாகவே பெரியார் சிலைக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications