தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரமாகுமா?
சென்னை:
தமிழகம் முழுவதிலும் நியமிக்கப்பட்ட 15,000 தற்காலிக ஊழியர்களின் பணியை நிரந்தரமாக்க அரசு யோசித்துவருவதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்ததால்,லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தற்காலிகஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதிலும் 15,000 பேர் தற்காலிக ஊழியர்களாக தேர்வுசெய்யப்பட்டனர்.
தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் 1.60 லட்சம் பேரில், 6032 ஊழியர்களைத் தவிர மற்ற அனைவரும்பணியில் சேர்ந்து விட்டனர். 6032 பேருடைய வழக்குகள் குறித்து 3 நீதிபதிகள் கொண்ட குழு விரைவில் விசாரிக்கஉள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவரும்.
இந்த நிலையில் தற்காலிகாமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 ஊழியர்களின் கதி குறித்து தெளிவாகத்தெரியவில்லை. அவர்கள் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது.
அவர்களது பணியை நிரந்தரமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரத்தில் பேசப்படுகிறது.அரசுப் பணிகளில் 1 லட்சம் காலியிடங்கள் உள்ளன.
எனவே 15,000 ஊழியர்களையும் அப்படியே வைத்துக் கொள்வதில் அரசுக்கு எந்தவித கூடுதல் சுமையும் வரப்போவதில்லை. எனவே இவர்களது பணியை நிரந்தரமாக்குவது தொடர்பாக விரைவில் அரசு அறிவிப்புவெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications