செங்கல்பட்டு அருகே வேன் மீது மணல் லாரி மோதல்: 8 பேர் சாவு- குடும்பமே பலி

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் என்ற இடத்தில் வேனும், மணல் லாரியும் மோதிக் கொண்டதில் 8 பேர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாகப் பலியாயினர். இவர்களில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அடிக்கடி மணல் லாரிகளால் விபத்து ஏற்பட்டு வருவகிறது. இந்தஅரைபாடி லாரி எமன்களுக்கு சாலையில் நடந்து சென்ற பலரும் உயிர் விட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி, தம்பு நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர்கள் இரு குடும்பத்தினர்வந்தவாசியில் உள்ள கோவிலுக்குச் சென்று வேனில் சென்று கொண்டிருந்தனர்.

மாமண்டூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த வேன் மீது எதிரே படு வேகத்தில் வந்த மணல் லாரி மோதியது.இதில் வேனில் பயணம் செய்த 8 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுஙகி பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 7பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண்கள்.

மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமான உள்ளதால் சென்னை அரசுபொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தவுடன் மணல் லாரியின் டிரைவர் தப்பியோடிவிட்டான்.

விபத்து நடந்த இடத்தை கைத்தறித் துறை அமைச்சர் சோமசுந்தரம், மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசன்ஆகியோர் பார்வையிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+