வேலை நிறுத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை,வேலை நிறுத்தம் கூடாது என்று கருத்துத் தான் தெரிவித்துள்ளது என காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின்தலைவரும் டிஸ்மிஸ் வழக்கில் தமிழக அரசு ஊழியர்களுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம்கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தஉத்தரவை வாபஸ் பெற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தொழிலாளர்களின்அடிப்படை உரிமையை இது பறிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந் நிலையில் இன்று சென்னையில் தனது இல்லத்தில் நிருபர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் கூறியதாவது:

தமிழக அரசு ஊழியர்களின் டிஸ்மிஸ் வழக்கு விசாரணையின்போது சில கருத்துக்களைத் தான் நீதிபதிகள்தெரிவித்தனர். வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

அதே நேரத்தில் வேலை நிறுத்தம் செய்ய அடிப்படை, தார்மீக, சட்ட ரீதியிலான உரிமை ஏதும் அரசுஊழியர்களுக்கு இல்லை என்று கூறினர். இதை உத்தரவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் கூட உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையில் வரவில்லை.ஒட்டுமொத்தமாக 1.7 லட்சம் பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட வழக்கு தான் நடந்தது.

ஸ்டிரைக் செய்ய ஊழியர்களுக்கு அடிப்படை உரிமை உண்டு என்பது தான் என் கருத்து. இது மனிதஉரிமைரீதியிலும் அரசியல்பரீதியிலுமான உரிமை. ஆனால், எடுத்ததற்கெல்லாம் ஸ்டிரைக் செய்ய உரிமைஇல்லை. மற்ற வகைகளில் முயற்சித்தும் பலன் கிடைக்காவிட்டால், இறுதி ஆயுதமாகத் தான் வேலை நிறுத்தம்இருக்க வேண்டும்.

அதையும் கூட எப்போதாவது தான் மேற்கொள்ள வேண்டும் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+