தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு: மத்திய அரசின் சட்டம் தயார்- ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனியார் நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய சமூகநலத்துறை அமைச்சகம் சட்ட முன் வடிவை உருவாக்கியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதில் பிற்படுத்தப்பட்டவர்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் நிலைக்கு ஆந்திர அரசு ஆதரவு தெரிவிப்பதாகவும்,இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கர்நாடகத்துக்கு எதிராக இணைந்து செயல்படத் தயாராகஇருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கருத்துத் தெவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.

நாயுடுவின் பேச்சு குறித்து முதல்வர் ஜெயலலிதாவும் அதிகாரப்பூர்வமாக கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

நதி நீர் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு முன்னின்று மேற்கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தில் வீணாககடலில் கலக்கும் பம்பா, அச்சன்கோவில் நதிகளை, தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைப்பதற்கானநடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.

இந்த இணைப்பின் மூலம் தென் மாநிலங்கள் வளம் பெறும். மேலும் தமிழகத்தில் உள்ள 1 லட்சம் ஏக்கர் பாசனநிலங்கள் பயன்பெறும், மின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை திரும்பச் சேர்க்கச் சொன்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புவரவேற்புக்குரியது. ஆனால், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தடை விதித்தது சரியல்ல.

தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்குதனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சட்ட முன்வடிவை உருவாக்கியுள்ளது.

இதில் பிற்படுத்தப்பட்டவர்களையும் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயை நாங்கள்வலியுறுத்துவோம். அனைத்து பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட எம்.பிக்களும் ஒன்று சேர்ந்து இந்த சட்டத்தை நிறைவேற்றஉதவ வேண்டும்.

மேலும் அனைத்து எம்.பிக்களுக்கும் தனித்தனியே இது தொடர்பாக கடிதமும் எழுதுவேன்.

கட்சத் தீவை மீட்டுவிட்டதாக கவர்னர் உரையில் குறிப்பட்டது தமிழக அரசு. இப்போது கச்சத் தீவை இலங்கையிடம்இருந்து குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதுஆச்சரியம் தருகிறது என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+