சென்னை- பெங்களூர் அரசு பஸ் மீது லாரி மோதல்: பஸ் தீப்பிடித்து 2 பேர் சாவு- 24 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

லாரியுடன் மோதிய அரசு பஸ் தீப்பிடித்துக் கொண்டதில் 2 பயணிகள் இறந்தனர். மேலும் 24 பேர்படுகாயமடைந்துள்ளனர்.

வேலூர் அருகே நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து வேலூரில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ள பெருமுகை என்ற இடத்தில் எதிரே வந்த லாரியுடன் பயங்கர வேகத்தில் மோதியது.

பஸ்சின் டீசல் டேங்க் மீது லாரி மோதியதால், மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்துக் கொண்டது. நள்ளிரவில்ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் இந்த மோதலில் நிலை குலைந்தனர்.

சம்பவ இடத்திலேயே 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர். இறந்து போனஇருவரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போய்விட்டன.

எரிந்து கொண்டிருந்த பஸ்சில் இருந்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரத்தக் காயங்களுடன் வெளியேறனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக எரிந்து போனது.

காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையிலும், சி.எம்.சி. மருத்துவமனையிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தவுடன் லாரியின் டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டான். இப்போது தலைமறைவாகிவிட்ட அவனைபோலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+