12 புதுக்கோட்டை மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை காணவில்லை. இலங்கை மீனவர்களால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சனிக்கிழமை காலை இவர்கள் அனைவரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று காலை திரும்பி வந்திருக்கவேண்டும். மொத்தம் 3 படகுகளில் பிரபு, ராஜா, சக்திவேல், மூர்த்தி, இடும்பன், ஜீவா, சக்திவேல், ஜீவா, பாஸ்கரன்,ஜெகன், கிருஷ்ணராஜ், ராஜ்குமார், புஷ்பராஜ் ஆகியோர்கடலுக்குள் சென்றனர்.
இதுவரை அவர்கள் திரும்பி வராததால், அவர்களைத் தேடி சில மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனமீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications