கோக் குடித்து செத்தா போனோம்?: உணர்ச்சிவசப்படும் மன்சூர் அலிகான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோக், பெப்சி குடித்து யாரும் செத்துப் போய் விட்டார்களா? எதற்காக கோக், பெப்சி விளம்பரங்களில் நடித்துள்ளநடிகர், நடிகையர் படங்களை எரித்துப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாககேட்டுள்ளார்.

கோக், பெப்சி விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை ஐஸ்வர்யா ராய், அமீர்கான் உள்ளிட்ட நடிகர்,நடிகையரின் படங்களை பொது மக்கள் தீயிட்டு எரித்து வருகின்றனர்.

இதனால் மன்சூர் அலிகானுக்கு கோபம் வந்துள்ளது. வழக்கமாக ஏதாவது அரசியல் கோமாளித்தனம் செய்யும்மன்சூர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

நான் கடந்த 30 வருடமாக கோக், பெப்சி குடித்து வருகிறேன். நான் செத்தா போய் விட்டேன்? பூச்சிக் கொல்லிமருந்து அதில் இருந்தால் நான் இன்னேரம் செத்துப் போயிருக்க வேண்டாமா?

எனது தொழிலைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அமீர் கான், சிரஞ்சீவி, விஜய் ஆகியோர் பெப்சி, கோக்விளம்பரங்களில் நடித்தார்கள் என்பதற்காக அவர்களது போஸ்டர்களையும், கட் அவுட்களையும் தீவைத்துஎரித்துள்ளது ஒரு கும்பல். இது காட்டுமிராண்டித்தனமான செயல்.

அமெரிக்காவிலிருந்து அண்டார்டிகா வரை கோக் சாப்பிடுகிறார்கள். இந்தியர்களுக்கு மட்டும் பூச்சி மருந்துகொடுத்திருந்தால் பாதி ஜனத் தொகை குறைந்திருக்க வேண்டுமே? எனவே இதில் ஏதோ சதி உள்ளது.

கோக் வேண்டாம் என்றால் வேறு எதைச் சாப்பிடுவது, சுக்குக் கசாயம் சாப்பிடலாமா? அல்லது விமானங்களில்இளநீரை எடுத்து அரிவாளால் சீவி, சீவி கொடுக்கப் போகிறார்களா?

நமது நாட்டில் உபரியாக விளையும் மாம்பழம், எலுமிச்சை, நார்த்தங்காய், தக்காளி ஆகியவற்றை ஏற்றுமதிசெய்ய ஒரு துப்பும் இல்லை, நாதியும் இல்லை. எனது ஊருக்கு அருகே உள்ள அரவக்குறிச்சியில் ஏராளமானமுருங்கைக்காய்கள் வீணாகின்றன.

அதை பதப்படுத்தி, சாறு எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். அதை செய்ய ஒரு வக்கு இல்லை, திராணியும்இல்லை. இந் நிலையில் வெளிநாட்டுக்காரன் கொடுத்த குளிர்பானத்தைக் குடித்தால் செத்து விடுவோமா?

பட்டை சாராயம் குடித்து நிறைய பேர் செத்துப் போயிருக்கிறார்கள். சாராயம் குடித்து செத்துப்போயிருக்கிறார்கள். ஆனால் கோக், பெப்சி சாபிட்டு யாரும் சாகவில்லை. மது பானங்களில் இவற்றைக் கலக்காமல்குடித்தால்தான் மனிதன் சாவான்.

எனவே உயிர் காக்கும் மருந்தாக இந்த குளிர்பானங்கள் உள்ளன என்று கூறியுள்ளார் மன்சூர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+