அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரமும் ரத்து!
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்த அடியைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
59 அங்கீகாரம் பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அவற்றின் கிளைச் சங்கங்கள் என 300க்கும்மேற்பட்ட சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கலைப்பு நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
கலைக்கப்பட்ட சங்கங்கள் அனைத்தும் ஜாக்டோ ஜியோ, கோட்டா ஜியோ கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டுவருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் சமீபத்தில்தான் ஒரு வழியாக முடிவுக்குவந்தது. இன்னும் கூட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலையில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது தமிழக அரசு.
கலைக்கப்பட்ட சங்கங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முக்கியமானதாகும். இந்த சங்கம் கடந்த 83ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான சங்கமாகும்.
தங்களது சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சங்கத் தலைவர் சூரியமூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசின் நடவடிக்கை மிகுந்த வேதனையைத் தருகிறது. வெள்ளையர் ஆட்சியில், அதாவது 83 ஆண்டுகளுக்குமுன்பே எங்களது சங்கம் உருவானது. வெள்ளையர்களால் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட எங்களது சங்கம் இதுவரைபல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கூட இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. எல்லாம் சுமூகமாகி வரும்நேரத்தில் இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது தாங்க முடியாத துயரத்தைத் தருகிறது என்றார்.
இவர் தீவிரமான ஜெயலலிதா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட காரணத்தால் சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசுசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் தொடர்பாக நடந்த சங்கங்களின் கூட்டங்களில் பேசிய பல நிர்வாகிகளும் அறுவெறுக்கத்தக்கவார்த்தைகளாலும், அசிங்கமான வார்த்தைகளாலும் அரசை விமர்சித்ததாக உளவுப் பிரிவு தகவல் தந்தது.இதையடுத்தே சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது.
இந்த ரத்து உத்தரவில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள்,சங்கங்களின் நிர்வாகிகளிடம் நேரடியாகவே கொடுக்கப்பட்டுள்ளது.
அரசின் முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தலைமைச் செயலக ஊழியர்கள் தான். ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால்அவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். தற்போது தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின்அங்கீகாரமும் ரத்தாகியுள்ளது.
இதை முதல்வர் ஜெயலலதிதா மறுபசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத் தலைவர் பாண்டுரங்கன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிந்து, நிலைமை சுமூகமாகிக் கொண்டுள்ள நிலையில் சங்கங்களின்அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது ஜெயலலிதாவின் சர்வாதிகார, அராஜக போக்கையே காட்டுகிறது எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
