ராணி மேரிக் கல்லூரி இடத்தை ஒப்படைக்கக் கோருகிறார் உரிமையாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணி மேரிக் கல்லூரியை இடிக்க அரசு முடிவு செய்தால், அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்என கல்லூரி அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரின் கொள்ளுப் பேத்தி கூறியுள்ளார்.

கடந்த 1915ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு, மெரீனா கடற்கரையில் ரத்தின சபாபதி முதலியார் என்பவரிடம்நிலத்தை வாங்கி உள்ள ராணி மேரிக் கல்லூரியைக் கட்டியது.

தற்போது ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ராணி மேரிக் கல்லூரியை இடிப்பதாக இருந்தால், அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என முதலியாரின் கொள்ளுப் பேத்தியான மகாலட்சுமி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கல்லூரி கட்டத்தான் அந்த இடத்தை என் கொள்ளுத் தாத்தாவழங்கினார். இதனால் அங்கு கல்லூரி மட்டுமே இயங்க வேண்டும். அந்த இடத்தை வேறு பணிகளுக்குபயன்படுத்தக் கூடாது, மீறி இடித்தால் இடத்தை உரிமையாளரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று நிலம் ஆர்ஜிதம்செய்தபோதே என் தாத்தா நிபந்தனை விதித்தார்.

அந்த நிபந்தனைகளை ஆங்கிலேயே அரசு ஏற்றுக் கொண்டதால் தான் நிலம் தரப்பட்டது. இவையெல்லாம்பத்திரத்திலேயே தெளிவாக உள்ளது.

எனவே, ராணி மேரிக் கல்லூரியை இடிக்கக் கூடாது. மீறி இடித்தால், அந்த இடத்தை ஒரிஜினல் உரிமையாளர்என்ற வகையில் என்னிடம்தான் கொடுக்க வேண்டும். இதற்கு சட்டப்பூர்வ உரிமையும் எனக்கு உள்ளது.

இதை உயர் நீதிமன்றத்திலும் ஏற்கனவே தெரிவித்துள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+