சுதந்திர தின விடுமுறை: பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள்
சென்னை:
சென்னையில் இருந்து நாகர்கோவில், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு பயணிகள் கூட்டம்அதிகமாக உள்ளதால் அதைச் சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 17ம் தேதி இரவு 8.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில்புறப்படும். மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவிலை சென்று அடையும். நாகர்கோவிலில் இருந்துசென்னை எழும்பூருக்கு 18ம் தேதி மாலை 5.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 8.35 மணிக்குசென்னை வந்து சேரும்.
இந்த ரயில் தாமபரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதே போல சென்னை சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடுக்கு இன்று இரவு (வியாழன்கிழமை) 8.45மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. நாளை காலை 7மணிக்கு பாலக்காடு சென்று சேரும் இந்த ரயில் அங்கிருந்துவரும் 17ம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்து சேரும்.
இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாடலூர் ஆகியஇடங்களில் நின்று செல்லும். சென்னை வரும்போது மட்டும் பெரம்பூர் நிலையத்திலும் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் இன்று (வியாழக்கிழமை)இரவு 9.15 மணிக்கு ஒரு சிறப்புரயில் புறப்படுகிறது. நாளை மாலை 4 மணிக்கு இது திருவனந்தபுரம் சென்றடையும். திருவனந்தபுரத்தில் இருந்து17ம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, பாடலூர், பாலக்காடு, ஒட்டபாலம்,திருச்சூர், ஆல்வாய், எர்ணாகுளம், கோட்டயம், செங்கனசேரி, திருவள்ளா, செங்கனூர், மாவேலிக்கரை,காயங்குளம், கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதற்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை முதல் செய்யப்பட்டு வருகிறது.
சுதந்திர தினமும், சனி, ஞாயிற்றுக்கிழமையும் அடுத்தடுத்து வருவதால் ரயில்களிலும், பஸ்களிலும் முன் பதிவுசெய்ய கூட்டம் அலைமோதுகிறது. இன்று இரவு புறப்படும் எந்த ரயிலிலும் இடமில்லை. அதே போல பஸ்களிலும்டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதனால் பலர், இன்றும் விடுப்பு எடுத்துக் கொண்டு, நேற்றிரவே ஊர்களுக்குப் புறப்பட்டுவிட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications